/* */

குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பு; பயணிகள் அவதி

கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், திடீரென படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைத்திருப்பது, பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

HIGHLIGHTS

குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பு;  பயணிகள் அவதி
X

குர்லா எக்ஸ்பிரஸில் பெட்டிகள் குறைப்பால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

கோவை - குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. திருப்பூர் : கோவைக்கும் மும்பைக்கும் வர்த்தக தொடர்புகள் அதிகம் என்பதால், கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ரயில் முன்பு, மும்பையின் குர்லாவிலிருந்து பெங்களூரு வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. கொங்கன் ரயில்வே அமைத்த பின், கோவை வழியிலான ரயில்கள் திருப்பி விடப்பட்டன. அதை ஈடுகட்டும் வகையில், 1998ல் அப்போதைய கோவை எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் முயற்சியால் இந்த ரயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த ரயிலில் முன்பு 11 பெட்டிகள், சாதாரண 'ஸ்லீப்பர்' வகுப்பு பெட்டிகளாக இருந்தன. இதனால், நடுத்தட்டு மக்கள், வர்த்தகர்கள் பலரும் இந்த ரயிலில் தொடர்ந்து பயணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 26 ம் தேதியில் இருந்து, இந்த ரயிலில் அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதிநவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும், இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கு மேலே குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 11 பெட்டிகளில், 720 'ஸ்லீப்பர்' இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில் நான்கு பெட்டிகள் மட்டுமே 'ஸ்லீப்பர்' வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால், 320 'ஸ்லீப்பர்' இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் 'ஸ்லீப்பர்' இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாக உள்ளது.

இதேபோல வேறு சில ரயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், 'ஸ்லீப்பர்' பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக தூத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறை ரயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும் 'ஸ்லீப்பர்' பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரயில் தென்மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது. குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரயிலில் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தது போல, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 'ஸ்லீப்பர்' பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதூர ரயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக ரயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் 'ஸ்லீப்பர்' பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்

கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து பெங்களூரு, பங்காருபேட்டை வழியாக தமிழகம் வந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையை கடந்து பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலி வரை தினமும் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (16315) செல்கிறது. திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கொச்சுவேலியில் பொறியியல் மேம்பாட்டு பணி , தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் வரும் 10ம் தேதி வரை எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். ஆலப்புழா, காயன்குளம், கொல்லம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Dec 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது