12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
X

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (கோப்பு படம்)

97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.56 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவிகிதமும், மாணவர்கள் 92.37 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் 91.2 சதவிகிதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 96.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.49 சதவிகிதமும், மகளிர் பள்ளிகளில் 96.39 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகளில் 86.96 சதவிகிதமும், இருபாலர் பள்ளிகளிகளில் 94.7 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த முறை 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 0.53 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,478. அதில் 397 அரசுப்பள்ளிகள் அடங்கும்.

மொத்தமாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். அவர்களின் மாணவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேரும், மாணவியர்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி விகிதம்..

இயற்பியலில் 98.48 சதவிகிதம் பேரும், வேதியியலில் 99.14 சதவிகிதம் பேரும், உயிரியலில் 99.35 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 98.57 சதவிகிதம் பேரும், தாவரவியலில் 98.86 சதவிகிதம் பேரும், விலங்கியலில் 99.04 சதவிகிதம் பேரும், கணினி அறிவியலில் 99.80 சதவிகிதம் பேரும், வணிகவியலில் 97.77 சதவிகிதம் பேரும், கணக்குப் பதிவியலில் 96.61 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக சதம்

தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும், இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும், உயிரியலில் 652 பேரும், கணிதத்தில் 2 ஆயிரத்து 587 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணினி அறிவியலில் 6 ஆயிரத்து 996 பேரும், வணிகவியலில் 6 ஆயிரத்து 142 பேரும், கணக்குப் பதிவியலில் ஆயிரத்து 647 பேரும், பொருளியலில் 3 ஆயிரத்து 299 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 2 ஆயிரத்து 251 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் 210 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!