/* */

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை வழங்கிய கலெக்டர்

கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினாா்.

HIGHLIGHTS

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை வழங்கிய கலெக்டர்
X

கழிப்பறை பராமரிக்கும் மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வழங்கினாா் 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பிடங்களை பராமரிக்கும் மகளிர் குழுவினருக்கு. ஊக்கத்தொகைக்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள எட்டு கழிப்பறைகளை பராமரிப்பு பணியினை மகளிர் சுய உதவி குழு சார்ந்த உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் பராமரித்து வருகிறார்கள். பக்தர்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் ஆலோசனைப்படி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கழிவறைகளை தூய்மையாக பராமரித்து வருகிறார்கள் .

கடந்த மாதம் சித்ரா பௌர்ணமி அன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் பராமரிக்கப்படும் பணியினை பார்வையிட்டு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தார்கள். சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் மட்டும் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்..

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சரண்யா தேவி, அரசு அலுவலர்கள் ,மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர்கள் 61 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், வழங்கினார்.

Updated On: 8 May 2024 2:37 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...