/* */

பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு

Coimbatore News- நாய்கள் கடித்ததால் விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் ஆங்காங்கே இறந்த நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
X

Coimbatore News- மான் உயிரிழப்பு

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.

இந்த நிலையில் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் மூன்று மான்களை நாய்கள் துரத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வனத் துறையினர் தணிக்கை மேற்கொண்டனர். இதில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் கூடைப் பந்து விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் ஆங்காங்கே இறந்த நிலையில் தென்பட்டு உள்ளது.

மான்களின் அருகே சென்று பார்த்த போது, மானின் உடலில் ஆங்காங்கே சிறிய ரத்தக் காயங்கள் தென்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்களின் கால் தடம் தென்பட்டு உள்ளது. உடனடியாக இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அறிவுரையின்படி வடவள்ளி கால்நடை மருத்துவர், இறந்த மான்களுக்கு உடல்கூறு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் வனப் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் நடந்து உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர். மான்கள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது வனவிலங்குகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 May 2024 3:45 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...