ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன்விழா லோகோ வெளியிட்டபோது கல்லூரியின் தாளாளர் செந்தாமரை, இயக்குனர் ஓம்சரவணா, சிறப்பு விருந்தினர் பிரகதீஷ் ஆகியோருடன் கல்வி நிறுவன அறங்காவலர் ஐஸ்வர்யா ஓம் சரவணா.
ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா தாளாளர் செந்தாமரை தலைமையில் நடந்தது. கல்லூரியின் நிறுவனர் ஜே.கே.கே.நடராஜாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் உள்பட கல்லூரி இயக்குனர் ஓம் சரவணா, அறங்காவலர் ஐஸ்வர்யா லட்சுமி, டீன் பரமேஸ்வரி, முதல்வர் நளினி உள்பட பலர் குத்துவிளக்கேற்றினர். சிறப்பு அழைப்பாளராக சமூக வலைதள பேச்சாளர் பிரகதீஷ் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.
அவர் பேசியதாவது:
முன்பெல்லாம் ஊடகத்துறையில் சாதிக்க, கதை எழுதி, பல இயக்குனர்கள் வசம் படித்து காண்பித்து, அவர்களுக்கு பிடித்து போய், அதுக்கு தயாரிப்பாளர் கிடைத்து, அதுக்கு ஏற்ற ஹீரோ கிடைத்து....என்றெல்லாம் இருந்த காலம் மாறி, இன்று சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் தனி சேனல் உருவாக்கி, தன் திறமையால் முன்னேற முடியும். நான் பி.ஈ. சிவில் இஞ்சினியர்.
ஆனால் நான் பார்ப்பது ஊடகத்துறை. உண்மையான கடின உழைப்பு, குறையாத ஆர்வம், தன்னம்பிக்கை இருந்தால் உங்களாலும் சாதிக்க முடியும். எனக்கு தைரியம் சொல்லி ஆளாக்கியது என் தாய். பெற்றோர் இல்லாமல் நீங்கள் இல்லை. என்றும் அவர்களை விடக்கூடாது. என்னுடன் 40 பேர் பணியாற்றி வருகிறார்கள் என்று நான் சொல்வதைவிட 40 குடும்பத்தினர் என்னுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பது பொருத்தம். அதுவே எனக்கும் பெருமை இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். கல்லூரியின் 50வது ஆண்டு விழா லோகோவை பிரகதீஷ் வெளியிட்டார். கல்லூரி பேராசிரிய பெருமக்கள், பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu