/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி அதிகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ அரசு பொது தேர்வு தமிழை விட ஆங்கில பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி அதிகம்
X

ஆசிரியருடன் தேர்வு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் மாணவிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மார்ச் ஒன்றாம் தேதி துவங்கிய பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் 5680 மாணவர்களும் 673 மாணவிகளும் என மொத்தம் 12,413 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 11,45 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு தேர்ச்சி பெற்று மாவட்டத்தின் சராசரி தேர்ச்சி விகிதத்தை 92.28 என நிர்ணயித்தனர். இதில் மாணவர்கள் 89 சதவீதமும் மாணவிகள் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

இது கடந்த ஆண்டு காட்டிலும் 1.4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி என்பது மாணவிகள் மாணவர்களை விட 5.9% தேர்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 89 சதவீதம் என்பதும் இது கடந்தாண்டை காட்டிலும் 2 .32 சதவீதம் கூடுதலாகும். மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முப்பத்தி மூன்றாவது தரவரிசியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 613 பேர் தங்கள் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதத்தை காணும் நிலையில், தாய் மொழியாம் தமிழ் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய 12,413 மாணவ மாணவிகளின் 12,131 நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 282 நபர்கள் தோல்வியுற்றுள்ளனர்.

ஆனால் ஆங்கில பாடப் பிரிவில் 243 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை என்பது பார்க்கையில் அதிர்ச்சி அளிக்கிறது. ஆங்கில பாடப்பிரிவு கடினமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதை எளிதாக்கி தமிழை கடினமாக்கி உள்ளனர்.

Updated On: 6 May 2024 4:27 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 2. இந்தியா
  தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
 3. இந்தியா
  பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
 4. சென்னை
  அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
 5. அரசியல்
  கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
 6. லைஃப்ஸ்டைல்
  தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
 8. ஆரணி
  ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
 9. தமிழ்நாடு
  தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
 10. அரசியல்
  நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?