பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம்
X

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் எழுதினர். இந்தநிலையில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.42 சதவீத தேர்ச்சி ஆகும். இதன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதேபோல், அரசு பள்ளிகள் அளவிலும் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 112 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 4,325 மாணவர்கள், 6,101 மாணவிகள் என மொத்தம் 10,426 பேர் எழுதினர். இதில் 4,064 மாணவர்கள் 5,906 மாணவிகள் என மொத்தம் 9,970 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 95.63 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த 2021- 2022ம் கல்வியாண்டில் 95.72 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 13ம் இடம் ஈரோடு மாவட்டம் பெற்றது. தொடர்ந்து, கடந்த 2022 - 2023ம் கல்வியாண்டில் 96.98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8ம் இடம் பெற்று, தற்போது 2023 - 2024ம் கல்வியாண்டில் 6 இடங்கள் முன்னேறி ஈரோடு மாவட்டம் 2ம் இடம் பெற்றுள்ளது. கடந்த 2013 - 2014, 2015 - 2016 ஆண்டுகளில் மாநில அளவில் முதலிடமும், 2017 - 2018, 2018 - 2019, 2019 - 2020 ஆண்டுகளில் மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்று பாராட்டுகளை அள்ளிய ஈரோடு மாவட்டம் நடப்பு 2023 - 2024 கல்வியாண்டில் 97.42 சதவீதத்துடன் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்து சாதனையை படைத்துள்ளது.

மேலும், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் பிடித்த ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், சிறந்த கல்வி அளித்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள்-மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!