/* */

ஏ சான்று வகை திரைப்படங்கள்: தணிக்கை வாரியம் முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஏ சான்று பெறும் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதை தடுக்க தணிக்கை வாரியம் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஏ சான்று வகை திரைப்படங்கள்: தணிக்கை வாரியம் முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரஷ்ணேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த பொது நல வழக்கின் மனுவில், திரைத்துறையில் தயாரிக்கப்படும் படங்களை பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்படுவதற்கு முன்பு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ்கள் வழங்கபடுகிறது.

அனைத்து வயதினரும் கண்டுகளிக்க கூடிய படங்களுக்கு யு சான்றும், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு ஏ சான்றும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி காணக்கூடிய படங்களுக்கு யுஏ சான்றும், வரையறுக்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு எஸ் சான்றும் வழங்கப்படுகிறது.

ஆனால், பல திரையரங்குகளில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதற்கான ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை காண சிறுவர்களையும் அனுமதிப்பதாகவும், அவ்வாறு அனுமதிக்கக் கூடாது என திரையரங்கங்களுக்கு மத்திய திரைப்பட வாரியம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அதை மீறி அனுமதிப்பது திரையிடுதல் சட்டத்தின்கீழ் குற்றமாகும் என மனுவில் பிரஷ்ணேவ் சுட்டிக்காட்டி இருந்தார்.

எனவே, மத்திய தணிக்கைத் வாரியத்தின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக கடைபிடிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் இதுதொடர்பாக தணிக்கை வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் பிரஷ்ணேவ் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி .ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கார்ட்டூன் படங்களைக் கூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க கூடாது என்று விதி உள்ளதாகவும், ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் எனவும் வாதிடப்பட்டது.

அப்போது, திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சிகளில் வெளியாகிவிடும் நிலையில், எப்படி தடுப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Updated On: 29 Jan 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு