/* */

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!

அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
X

சாலையை பாதி மூடி வைக்கப்பட்டிருக்கும்  ,தடுப்புகளை அகற்ற கோரிக்கை.

சோழவந்தானில் பொது மக்களுக்கு இடையூறாக, சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தானில் ஆர் .எம். எஸ். காலனி பகுதியில், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சோழவந்தான் அருகே உள்ள விரிவாக்கப் பகுதியான ஆர். எம். எஸ். காலனி முன்பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சோழவந்தானிலிருந்து, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோகளில் செல்பவர்கள் சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதிவிடுவதால் , சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. அதுவும் இரவு நேரத்தில் மதுரையிலிருந்து வருபவர்கள், வாகனத்தில் வேகமாக வரும் போது அந்த இடத்தில் தடுப்புகள் இருப்பதற்கான அடையாளங்கள் அல்லது மின்விளக்குகள் இல்லாததால், தடுப்புகளை கவனிக்காமல் மோதி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆர். எம் .எஸ் . காலனியில், இருந்து வரும் வாகனங்களும் உடனடியாக திரும்பும் போது தடுப்புகளில் மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆகையால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளை அகற்றி விபத்துகளை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 16 May 2024 11:24 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...