/* */

முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி ஈரோடு மண்டலம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

HIGHLIGHTS

முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்
X

சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களான 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாளை 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) 18ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 19ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சாா்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 17.05.2024 முதல் 19.05.2024 வரை உள்ள நாட்களுக்கு ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்‌.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 May 2024 11:32 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...