/* */

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியானார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
X

தங்கவேல்

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியானார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, குள்ளநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கவேல் (வயது 57,) சரஸ்வதி( 54,) தம்பதியர் வசித்து வந்தனர்.

இன்று காலை தாங்கள் வளர்க்கும், யூக்கலிப்டஸ் மரத்திலிருந்து, இலைகள் பறித்து ஆடு, மாடுகளுக்கு போட, இலைகள் பறிக்கும் வேலையில் சரஸ்வதி ஈடுபட்டிருந்தார். இரும்பு கொக்கியில் பறித்த போது, மேலே உள்ள மின் கம்பியில் கொக்கி பட்டதும் மின்சாரம் தாக்கி, அலறியபடி கீழே விழுந்தார், இவரது அலறல் சத்தம் கேட்ட தங்கவேல் ஓடி வந்து இவரை காப்பாற்ற முயற்சிக்க, இவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

சரஸ்வதி.

இதனைப்பார்த்த இவர்களது பக்கத்து தோட்டக்காரர்களான மோகன் மற்றும் தம்பதியரின் மகள் சவுமியா ஆகிய இருவரும் ஓடி வந்து பார்த்த போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் இருவரும் பலியானார்கள். இது குறித்து குமாரபாளையம் போலீசில் சவுமியா புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 16 May 2024 12:03 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...