மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
X

மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு செய்திக்கான மாதிரி படம் 

விழுப்புரம் மாவட்டம், தேனூர் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் படப்பை அருகே தங்கியிருந்து கட்டிடப் பணிகளை செய்து வந்தார்.

படப்பை அருகே புதிய வீடு கட்டுமான பணியின் போது தவறி கீழே விழுந்த மின் விளக்கை எடுக்க முயன்ற கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி ஆனார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் அகத்தீஸ்வரன் கோவில் தெருவில் மணி என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார் . அந்த வீட்டின் பூச்சு வேலைகள் இன்று நடைபெற்று வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் தேவனூர் பகுதியை சேர்ந்த ஜோதி (வயது 44) என்பவர் ஒரத்தூர் பகுதியில் தங்கியிருந்து மணி வீட்டின் கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.

வீட்டின் பூச்சு வேலைகளில் இன்று மதியம் ஈடுபட்டிருந்த ஜோதி , பலகையில் கட்டப்பட்டிருந்த மின்விளக்கு தவறி கீழே விழுந்தது. அந்த பல்பை எடுக்க ஜோதி முயற்சித்த போது ஜோதி மீது மின்சாரம் தாக்கியது. அதில் படுகாயம் அடைந்த ஜோதி துடிதுடித்து மயங்கினார். அங்கே இருந்தவர்கள் ஜோதியை மீட்டு அங்கிருந்த மினி லாரியில் ஏற்றிக்கொண்டு படப்பையை நோக்கி வரும்போது ஜோதியின் உயிர் வழியிலேயே பிரிந்தது.

சம்பவம் அறிந்து ஒரத்தூர் - படப்பை சந்திப்பு அருகே வந்த மணிமங்கலம் காவல் துறையினர் ஜோதியின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வீட்டின் உரிமையாளர் மணி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

குன்றத்தூர் ஒன்றியத்தில் தினந்தோறும் ஒருவர் மின்சாரம் தாக்கி இறப்பது சகஜம் ஆகிவிட்டது. என கூறப்படுகின்றது. இதை மின்வாரியமும் காவல்துறையினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Tags

Next Story
ai google healthcare