/* */

தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு

தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று செல்வ பெருந்தகை பேசினார்.

HIGHLIGHTS

தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
X

நாமக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பேசினார்.

லோக்சபா தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறினார்.

நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கலில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்பலத்த வேண்டும் என நினைப்பவர்கள் இந்த கட்சியில் பணி புரியலாம். தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும். அங்கு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்W காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸை கொண்டு வர நாம் பாடுபடவேண்டும். தனிப்பட்ட வெறுப்புகளை கட்சியில் புகுத்தாதீர்கள். நாம் கட்சிக்காக கடுமையாக உழைக்கவில்லை. மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை அதனால் தான் நமக்குள் இந்த இகோ பிரச்சனை. நமது தலைமுறையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினை ஆளுங்கட்சியாக கொண்டு வர பாடு பட வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளை உள் வாங்கி கொண்டு அதற்கு ஏற்றால் போல் நடங்கள் அதற்கு ஏற்ப நாங்கள் கட்சியை நடத்த தயாராக உள்ளோம். அனைத்து மக்களும் ஏற்கும் வகையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்ற கட்சிகள் மக்களை குழப்பி இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி வருகிறது. வருகின்ற ஜூன் 4 ந்தேதி லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும். நாமக்கல் மாவட்டத்திலும் முதன்மை கட்சியாக காங்கிரஸ் வர வேண்டும், அதற்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன், காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வக்குமார், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி, முன்னாள் எம்.பி ராணி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 16 May 2024 11:00 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...