/* */

தொட்டுவிடும் தூரத்தில் அபாயம் : மின் விபத்தை தடுக்க தென்னை மட்டை கட்டிய அவலம்

தொட்டுவிடும் தூரத்தில் அபாயம் : மின் விபத்தை தடுக்க தென்னை மட்டை கட்டிய அவலம்
X

சுரண்டை அருகே சேர்ந்தமரம் மெயின் ரோட்டில் மின் விபத்தை தடுக்க நெடுஞ்சாலை போர்டில் தென்னை மட்டையை கட்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சுரண்டையிலிருந்து வீரசிகாமணி செல்லும் ரோட்டில் வீரசிகாமணி விலக்கிற்கு முன்பாக பெட்ரோல் பங்க் முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில் பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயர் பலகையை ஒட்டி ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்களில் ஹை வோல்டேஜ் மின்சாரம் செல்லும் வயர் செல்கிறது. அதனை சரிவர கவனத்தில் கொள்ளாத நெடுஞ்சாலை துறையினர் அதனை ஒட்டி போர்டை அமைத்துள்ளனர்.

இதனால் காற்று அடிக்கும்போது மின்சார ஒயர் பெயர் பலகையில் பட்டு பெயர்ப்பலகை அமைக்கப்பட்டு உள்ள கம்பத்தில் மின்சாரம் வந்துள்ளது.இதனால் உடனடியாக பெயர் பலகை அருகில் தென்னை மட்டையை கொண்டு கட்டி மின்சார ஒயர் பலகையில் உரசாத படி கட்டியுள்ளனர். இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் தென்னை மட்டை கீழே விழுந்து மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே ஹை வோல்டேஜ் மின்சார ஒயர் செல்வதால் அருகில் சென்றாலே ஷாக் அடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது மேலும் நடந்து செல்பவர்கள், விவசாய பணிகளுக்காக செல்பவர்கள், .கோவிலுக்கு வரும் குழந்தைகள், அதனருகில் விளையாடுவதால உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தென்னை மட்டை அகற்றிவிட்டு மின்சார ஒயர் பெயர் பலகை மீது படாதவாறு மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Dec 2020 8:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க