மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி
இது தான் செனனை ஐஐடி உருவாக்கி உள்ள பறக்கும் டாக்சி.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் ஊக்குவிப்புடன் மூன்று நாட்களுக்கு ஒரு நிறுவனம் என்ற கணக்கில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பறக்கும் மின்சார டாக்ஸி தயாரிக்கும் பணியில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் உலகின் முதல் பறக்கும் மின்சார டாக்ஸியாக இருக்கும்.
அந்த பறக்கும் டாக்ஸி மணிக்கு 200 கி மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது .பறக்கும் டாக்ஸி தரையிறங்கவும் புறப்பட்டு பறக்கவும் 15 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட இடம் போதுமானது .அந்த டாக்ஸியில் இரண்டு பேர் பயணிக்கலாம். மேலும் 25 கி.மீ தூரத்தை பத்து நிமிடங்களில் அந்த டாக்ஸி கடக்கும். இந்தியா உட்பட பல நாடுகளில் சாலை போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன இதற்கு தீர்வு காணும் விதமாக பறக்கும் மின்சார டாக்சி தயாரிப்பு பணியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது.
இந்த முயற்சியை பாராட்டி மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் உலகின் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு அடுத்த சில ஆண்டுகள் பறக்கும் மின்சார டாக்ஸி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இது போன்ற தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையங்கள் அதிகரித்துள்ளன. புதுமையான படைப்பாளிகள் இல்லாத நாடு என்று இந்தியாவை இனி மேல் யாராலும் கூற முடியாது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu