காஞ்சிபுரத்தில் உபகரணங்கள் இல்லாத நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவு பிறப்பித்தும் அதற்கான உபகரணங்கள் வழங்காததால் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் உள்ளன.
விவசாய மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 900 க்கும் மேற்பட்ட ஏரிகளும், கிராம பஞ்சாயத்துக்களின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான குளம் சிறிய ஏரிகள் அமைந்துள்ளது.
குறிப்பாக விவசாய மாவட்டத்தின் பெரும்பங்கு வகிப்பது உத்திரமேரூர் விவசாயிகளே என்பது மிகையல்ல. உத்திரமேரூர் ஏரி மிகப்பெரிய ஏரிகளில் என்றும் , இதனால் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது.
இந்நிலையில் கடந்த பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு அது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரமேரூர் அடுத்த பெருங்கோழி , கட்டியாம் பந்தல் உள்ளிட்ட 10 கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் பெருங்கோழி கிராமத்தில் இரண்டு பொதுப்பணித்துறை ஏரிகளும் 2 பஞ்சாயத்து ஏரிகளும் என அடங்கியுள்ள நிலையில், இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நுகர்பொருள் வாணிப மண்டல அலுவலகம் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டதன் பேரில் அனைத்து விவசாயிகளும் இணைந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் நிலையத்திற்கான பணிகளை மேற்கொண்ட பின் அதற்கான உபகரணங்கள் வழங்காமல், ஏரி மற்றும் குறைந்த விலை நிலங்கள் உள்ள பகுதியான மற்றொரு பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உபகரணங்கள் அளிக்கப்பட்டது அறிந்து இன்று மாவட்ட ஆட்சியரை ஏரி பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம விவசாயிகள் என 50க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்கள் பகுதியில் அறுவடை செய்த நெல்கள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், தங்களுக்கு உபகரணம் அளித்து விவசாயிகளை வாழ்விக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 தினங்களுக்கு மேலாக அறுவடை செய்த நெல்கள் அனைத்தும் புதிதாக அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குவியல் குவியலாக நெல் கொட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu