தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ மற்றும் எம் ஏ (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் பி ஜி டி எல் ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டய படிப்பு ), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார (இறுதி பட்டய படிப்புகள்) நடத்தப்பட்டு வருகின்றன.
பி ஏ ,எம் ஏ படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி ஜி டி எல் ஏ ,டி எல் எல் (ஏ எல்) படிப்புகள் அரசின் அங்கீகாரம் பெற்றவை. மேலும் இந்த படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழிலாளர் நல கமிஷனர், தொழிலாளர் நல அலுவலர், தொழிற்சாலைகள் பதவிகளுக்கு பிஏ, எம்ஏ, பி ஜி டி எல் ஏ ஆகிய படிப்புகள் முன்னுரிமை தகுதிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
விருப்பமுள்ள இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை மற்றும் முதல்நிலை படிக்கும் ஆண் மாணவர்களுக்கு மட்டும் தங்கும்படி வசதி உள்ளது. விண்ணப்பங்களை தபாலில் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான 200 (எஸ்சி எஸ்டி 100 )மற்றும் தபால் கட்டணம் 50 க்கான வங்கி வரைவோலையை The Director Tamilnadu insititute of labour studies chennai என்ற பெயரில் எடுத்து பதிவு தபால், விரைவஞ்சல், கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) முனைவர் ரமேஷ் குமார் இணை பேராசிரியர் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் ,அரசு ஐஐடி பின்புறம் ,அம்பத்தூர், சென்னை 98 என்ற முகவரியில் விவரங்கள் பெறலாம்.
இந்த தகவல்களை தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu