திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்

திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
X

திருச்சியில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் அக்னி நட்சத்திர வெயில் மாயமாகி உள்ளது.

திருச்சியில் தினமும் பெய்து வரும் மழையால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. வருகிற 24-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய வல்லுனர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே பல நகரங்களில் வெயில் சதத்தை தாண்டியது.

ஈரோடு ,கரூர் உள்ளிட்ட சில இடங்களில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெப்ப அலை வீசியதால் மக்கள் வெளியில் நடமாட மிகவும் சிரமப்பட்டார்கள். முதியவர்கள் குழந்தைகள் பாடு மிகவும் திண்டாட்டமாக இருந்தது. வெயிலுக்கு பலர் பலியானார்கள்.

அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்குமோ என்று மக்கள் அஞ்சி நடுங்கி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மதுரை, ஈரோடு, கோவை மாவட்டங்களில் பெய்த மழையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

காலையில் வெயில் மாலையில் மழை என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில் இன்று திருச்சி நகரின் பல பகுதிகளிலும் மதியம் ஒரு மணிக்கு மேல் பலத்த மழை கொட்டத் தொடங்கியது.

இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதன் காரணமாக இரவில் மக்கள் ஏசி ,ஃபேன் வசதி இல்லாமல் குளிர்ந்த காற்று வீசியதால் நிம்மதியாக தூங்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப அக்னி நட்சத்திர தாக்கமும் குறைந்து இருப்பதால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?