கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு

கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
X

இரவு மழை.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 72.80 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் பகுதியில் 27 மி.மீ மழைப்பொழிவு பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு மாதத்திற்கு மேலாக வெயில் கொளுத்தியது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தில் தான் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால் நடப்பாண்டு அக்னி நட்சத்திரத்தில் நீடிக்கும் வெயில் கடந்த மாதம் முழுவதும் நிலவியது. கடந்த 2ம் தேதி அதிகபட்சமாக ஈரோட்டில் 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல் கடந்த ஒரு வாரமாக 110 டிகிரி வெயில் நீடிக்கிறது.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மதிய வேளையில் சாலையில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. ஈரோட்டில் நேற்று 109.76 டிகிரி வெப்பநிலை பதிவானது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி முதலே பலத்த காற்றுடன் தூறல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், இன்று அதிகாலை 2 மணியளவில் மாவட்டத்தில் பல்வேறு திடீரென மழை பெய்தது. ஈரோடு மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரை நேரம் மழை நீடித்தது. இரண்டரை மாதத்திற்கு மேலாக வெயில் உச்சம் தொட்ட நிலையில் மழை பெய்துள்ளது. இந்த மழையால் லேசான குளிர்காற்று வீசியது. இது கடும் வெயிலின் பிடியில் சிக்கித்தவித்த மக்களுக்கு சற்று ஆசுவாசமாக அமைந்தது.

மாவட்டம் முழுவதும் நேற்று (மே.6) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.7) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 3.20 மி.மீ,

வரட்டுப்பள்ளம் - 22.60 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் - 27.00 மி.மீ,

சத்தியமங்கலம் - 19.00 மி.மீ,

பவானிசாகர் - 1.00 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 72.80 மி.மீ ஆகவும், சராசரியாக 4.28 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!