/* */

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜர்..!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.

HIGHLIGHTS

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜர்..!
X
தமிழக காவல்துறை முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்.(கோப்பு படம்)

தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர் ராஜேஷ்தாஸ். இவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021 மார்ச் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவியதாக செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணையை முடித்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் 2021 ஜூலை மாதம் 29ம் தேதி தாக்கல் செய்தனர்.

2021 ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகாமல் இருந்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இதே நிலை நீடித்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்தது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் 2021 டிசம்பர் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜரானார். ஆனால், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தற்போது மீண்டும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 July 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை