விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி  தலைவர் உயிரிழப்பு
X
சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த திருமழிசை பேரூராட்சி தலைவர் வடிவேல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி திருமழிசை பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர் திமுகவை சேர்ந்த வடிவேல் (வயது 62).

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மைத்துனர் மூர்த்தி உடன் தனது மாந்தோட்டம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர்.

பின்னர் மண்ணூர் கூட்டுச்சாலையில் மதிய உணவு அருந்திவிட்டு அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டு இருந்த பனை நுங்கு வாங்கிய அவர்கள் மீண்டும் தனது மாந்தோட்டம் உள்ள வளர்புரம் நோக்கி புறப்பட்டனர். வடிவேல் காரை இயக்க அவருடைய மைத்தனர் அருகில் அமர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது மண்ணூர் கூட்டுச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது மைத்துனர் வாங்கிய பனை நுங்கை ஒன்றை காரை இயக்கி கொண்டிருந்த வடிவேல் கையில் கொடுக்க முயன்ற போது அதை தனது வலது கையில் பெற வடிவேலு முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியதில் டயர் வெடித்து கார் தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் வடிவேலுக்கு தலையில் பாலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் காரில் மயங்கி கிடந்தார் அருகில் இருந்த அவருடைய மைத்தனர் சிறிய கிடைத்துள்ளார் இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் மீட்டு பூந்தமல்லி தண்டலம் பகுதியில் உள்ள சவிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் வடிவேல் பலத்த காயமடைந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த செய்தியை கண்டு திருமழிசை பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story