டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்

பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய சுகாதார ஆய்வாளர்
ஒவ்வொரு வருடமும், மழைக்காலம் முடிந்த பின்னர் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவக்கூடிய நோய் வகைகள் மிக வேகமாகப் பரவி மக்களை மிகுந்த அச்சத்துக்குள்ளாகுகின்றன. இது குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார துறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வீடு வீடாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி கோடை மழை தாக்கத்தில் பொதுமக்களை கொசுக்களால் ஏற்படும் டெங்கு மலேரியா போன்ற நோய்களிலிருந்து காக்க சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நிலவேம்பு குடிநீர் வீடு வீடாக வழங்கப்பட்டது.
சேத்துப்பட்டு பேரூராட்சி, வட்டார சுகாதார நிலையம் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் , மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ,உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி தலைவர் சுதா முருகன் செயல் அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொது மக்களுக்கு சுகாதார ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
சேத்துப்பட்டு ,பழம்பேட்டை, நிர்மலா நகர், லூர்து நகர், அருந்ததி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை நீர் தேங்காமலும், கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்க தேவையற்ற பானை, பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடு, டயர் போன்ற பொருட்களை அப்புறப்படுத்திடுமாறும் , தங்கள் வீட்டையும் தெருவையும், தங்கள் பகுதியையும் சுத்தமாகவும் சுகாதாரமும் வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரப் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
சுகாதார ஆய்வாளர் பேசுகையில், டெங்கு என்பது கொசுவினால் பரவும் வைரஸ் தொற்று. முக்கியமாக வெப்ப மண்டலம் மற்றும் மிக வெப்ப மண்டலம் பகுதியில் எளிதில் பரவும் பொதுவாக கொசுக்கள் வைரஸ் தொற்று உள்ள ஒருவரை கடிக்கின்றன. இதனால் ஏற்படும் டெங்குவால் அதிக காய்ச்சல் மற்றும் தசை மூட்டு வலி கடுமையான ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. டெங்கு உயிருக்கு ஆபத்தானதாக இருந்தாலும் கூட சரியான நேரத்தில் சரியான சிகிச்சை மூலம் டெங்குவை தடுக்கலாம் என சுகாதார ஆய்வாளர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu