Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 17 வெள்ளிக்கிழமை ராசிபலன்கள்

குரோதி - வைகாசி 4 – மே 17 - வெள்ளி

இன்று நல்ல நேரம்: காலை 9.30 - 10.30; மாலை 4.30 - 5.30

திதி: தேய்பிறை நவமி; காலை 10.55 பிறகு தசமி

நட்சத்திரம்: பூரம்; இரவு 11.03 பிறகு உத்திரம்

யோகம்: சித்தயோகம் முழுவதும்

வார சூலை: மேற்கு

குளிகை: காலை 7.30 - 9.00

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

சூரிய உதயம்: நாளை: 5.54 அஸ்தமனம்: இன்று மாலை 6.32

தினப்பலன்

மேஷம்: அஸ்வினி,பரணி,கார்த்திகை1ம்பாதம்:எல்லாநெருக்கடிகளையும் மீறி சுபச்செய்தி வரும். வாரிசுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணிக்கு ஆரோக்கிய செலவு ஏற்படலாம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: வீண் போட்டி, எதிர்ப்பு, எதிரி விஷயங்கள் காணாமல் போகும். ரோகிணிக்கு புதியவர்களின் தொடர்பு ஏற்படும். மிருகசீரிடத்துக்கு பணவரவு.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதம்: சந்தோஷம் அதிகரிக்கும். திருவாதிரைக்கு அரசு அனுகூலச் செய்திகள் வரும். புனர்பூசத்துக்கு தடைப்பட்ட காரியங்கள் முடிவு பெறும்.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: பலவிதமான மனஉளைச்சல்களுக்கு தீர்வு கிடைக்கும். பூசத்தினர் சகோதரர்களால் உதவி பெறுவர். ஆயில்யத்துக்கு சிறு குழப்பம் வரலாம்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: எதிர்பார்த்திருக்கும் விஷயங்கள் நல்லவிதமாக முடியும்.தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையுடனான சச்சரவுகள் நீங்கும்.

கன்னி : உத்திரம் 2,3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்:நினைத்தது எளிதாக கைகூடும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். பிறரிடம் கொடுத் திருந்த பெரிய தொகை கிடைத்துவிடும்.

துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்: நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். குடும்ப சங்கடத்துக்கு தீர்வு ஏற்படும். விசாகத்துக்கு தடையான விஷயங்கள் வெற்றியில் முடியும்.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: வீண் அவஸ்தைகள் மறையும். அனுஷத்துக்கு தொந்தரவுகள் நீங்கும். கேட்டைக்கு காணாமல் போன முக்கியமான பொருள் கிடைக்கும்.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: உறவுகள் ரீதியான பஞ்சாயத்துக்கு தீர்வு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூராடத்துக்கு கடன் தொகை திரும்ப வரும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம்பாதம்: நண்பர்களால் ஏற்பட்டகுழப்பங்கள் விலகும். கடன் விவகாரத்துக்கு தீர்வு காத்திருக்கிறது. திருவோணத்துக்கு விஐபிக்கள் அறிமுகமாவர்.

கும்பம் : அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: வீண் கெடுபிடிகள் நீங்கும். அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். பூரட்டாதிக்கு உறவுகளால் பெரிய ஆதாயம் கிடைக்கும்.

மீனம் : பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: தொழிலில் லாபம் உண்டு. உத்திரட்டாதிக்கு விஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். ரேவதியினரின் சொத்துப் பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!