/* */

தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்: அமைச்சர் தகவல்

Echarging - தேசிய நெடுஞ்சாலைகளில், முதல் கட்டமாக, 100 மின்சார வாகன 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

HIGHLIGHTS

Echarging | Tneb Minister
X

Echarging -கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீலகிரி, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகலுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கனமழை காரணமாக, நீலகிரியில், 150 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் காவிரி வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக ஈரோடு, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் 38 டிரான்ஸ்பார்மர்கள் என மொத்தம், 188 டிரான்ஸ்பார்மர்கள் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படும்,5,392 மின் இணைப்புகளுக்கு மின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதும், உடனடியாக மின் வினியோகம் வழங்கப்படும். கன மழை, புயல் பாதிப்பு உள்ள இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, மின் சாதனங்களை தரையில் இருந்து உயரத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளில், மின் வாரியம் சார்பில் முதல் கட்டமாக, 100 மின்சார வாகன 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Aug 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை