/* */

ஆணையர் மனு ரசீது வழங்க வலியுறுத்திய பாமக

ஆணையர் மனு ரசீது வழங்க வலியுறுத்திய பாமக
X

திருவண்ணாமலையில் கோரிக்கை மனுவிற்கு ஆணையர் ரசீது வழங்க வேண்டுமென பாமக வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் தர்மபுரி எம்எல்ஏ வேலுச்சாமி தலைமையில் தமிழக அரசு வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு உடனே வழங்க கோரி பெண்கள் உள்பட ஏராளமான பாமகவினர் கோட்டை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாநில துணைபொதுச்செயலாளர் வேலாயுதம் முன்னாள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் இல.வேலுச்சாமி மற்றும் பாமகவினர் நகராட்சி ஆணையர் ராஜ விஜயகாமராஜிடம் ஒதுக்கீடு சம்மந்தமான கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது மனுவை பெற்றுக் கொண்ட ஆணையரிடம் மனு பெற்றுக் கொண்டதற்கான ரசீது கேட்டனர். அப்போது ஆணையர் மனுவை பெற்றதற்கான ரசீது தன்னால் தர முடியாது என்றும் வேண்டுமானால் அலுவலர்களிடம் மனு பெற்றதற்கான சீல் வைத்து தருவதாக கூறினார்.

ஆனால் பாமகவினர் ஆணையர் மனு பெற்றதற்கான கையெழுத்து இட்டு ரசீது தர வேண்டும் என கூறினர். இதனால் ஆணையருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆரணி டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் பாமகவினரை சமாதானப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து பாமகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 8 Jan 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்