ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்

ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
X

அந்தியூர் காட்டூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.

ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், சேதம் அடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வாழை மரம் தோட்டக்கலைத்துறையின் கீழ் வரும் நிலையில் சேதமடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ப.மரகதமணி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், லட்சக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது.

வருவாய்த்துறையினருடன் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், 269 விவசாயிகளுக்குச் சொந்தமான, 120 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு வருவாய்த்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர