/* */

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
X

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் துவங்கியது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் திட்டங்களை அறிவித்து உரையாற்றி வருகிறார். முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு முக்கிய அம்சங்கள்

*ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கான நவீன விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.

* 2.2 லட்சம் மாணவிகளுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

* பெண் தொழில் முனைவோர் புதிய தொழில்களை தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும்.

* உணவு மானிய திட்டத்திற்கு ரூபாய் 10,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன.

* கோபி பகுதியில், தந்தை பெரியார் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.

* 4.3 லட்சம் மீனவர் நலத் திட்டங்களுக்கு ரூ389 கோடி நிதி ஒதுக்கீடு. கடல் அரிப்பை தடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும்.

* ரூ. 25 கோடியில் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.

* கட்டட வரைபடங்களுக்கான அனுமதியை இணையம் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* விவசாய கடன்களுக்கு 2390 கோடி ஒதுக்கீடு. நகைக்கடன் வழங்க ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு. வரவு செலவுக்காக ரூபாய் 3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அதிகரித்து வரும் தெரு நாய் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, விலங்குகள் இன விரத்தி கட்டுப்பாடு பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

* ரூ.2000 கோடி மதிப்பில் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

* தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் 10,000 குளங்கள் ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்

* கோவையில் செம்மொழி பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும். இதற்காக 43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அடையாறு, கூவம் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகள் ரூ.1500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

* வரும் நிதியாண்டில் மீன்படி குறைந்த கால சிறப்பு நிவாரணம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டங்கள் என 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 389 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* வீட்டுவரை தொழில்வரி குடிநீர் வரி வரியை ஊராட்சிகளுக்கு இணைய வழியில் எளிதில் செலுத்துவதற்கு ஒரு வலைதளம் வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.விரைவில் கட்டட வரைபடம் மனை வரைபட அனுமதிகளையும் இணைய வழியில் பெற வழிவகை செய்யப்படும்

* கோவை மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சி மேற்கொள்ள அனைத்து மக்கள் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்படும்

* கடலரிப்பைத் தடுத்து, கடலோரப் பன்மயத்தை அதிகரித்து, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மாசுபாட்டைக் குறைக்க "தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்" ரூ.2000 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்

* சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் இயற்கை தரம் வாய்ந்த நகர பொது சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்படும். சென்னை தீவுத்தடலை மேம்படுத்த ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு

* சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு. வடசென்னை வளர்ச்சி திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

* முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும்.

Updated On: 20 March 2023 6:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!