வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

பெற்ற மகன் மருமகள் வீட்டை விட்டு விரட்டியதாக கூறி மனு கொடுக்க வந்த முதியவர்.

மகன், மருமகள் சேர்ந்து முதியவரை வீட்டை விட்டு துரத்தியதாக பாதிக்கப்பட்ட முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளார்.


திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முதியவர் ரகுநாதன். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் உள்துறை அமைச்சகத்தில் மரதச்சு வேலை செய்து வந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருடைய மனைவி விபத்தில் இறந்துள்ளதால் தன் மகனுடன் முதியவர் ரகுநாதன் வசித்து வருகிறார். இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மகன் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் மருமகள் மற்றும் மருமகளின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து முதியவரை அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் வீரராகவர் கோவிலில் பிச்சை எடுத்து பிழைப்பை தனது வாழ்நாளை கழித்து வந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து வழக்கறிஞர் ஜான் என்பவர் அவரை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்துள்ளார்.

அப்போது அந்த முதியவருடன் வந்திருந்த மகள் வழி பேரனான குழந்தை தனது தாத்தாவை இப்படி எல்லாம் அடித்தார்கள், உணவை தட்டி விட்டார்கள் என கூறியது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!