ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை

ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
X

Erode news- ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை தூத்துக்குடி சதர்ன் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு தலைவர் சிவக்குமார் ஜெயராமன் வழங்கிய போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 1,516 மாணவ-மாணவிகளின் வேலைக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Erode news, Erode news today- ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 1,516 மாணவ-மாணவிகளின் வேலைக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு, தேசிய நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.

அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்து பேசினர். விழாவில், சிறப்பு அழைப்பாளரான தூத்துக்குடி சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்டிரிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவர் சிவக்குமார் ஜெயராமன், 118க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற, 1,516 மாணவ, மாணவியருக்கு பணி நியமன உறுதி சான்றிதழ் வழங்கி பேசினார்.

விழாவில் நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் ரகுபதி, நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அதிகாரி வேலுசாமி, நந்தா கல்வி நிறுவனங்களின் மனிதவள தலைவர் பிரபு, வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், நந்தா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story