/* */

டாஸ்மாக் பார்கள் நாளை முதல் திறப்பு: அரசு கிடுக்குப்பிடி உத்தரவு

தமிழகத்தில் நாளை முதல் பார்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அறிவிப்பின் படி பார்களை நடத்த முடியுமா என்கிற அச்சத்தில் உரிமையாளர்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் பார்கள் நாளை முதல் திறப்பு: அரசு கிடுக்குப்பிடி உத்தரவு
X
டாஸ்மாக் மதுபான கடையின் பார். ( பைல் படம்)

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி நவம்பர் (1ம் தேதி) அதாவது நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் பார்கள் இயக்கலாம் என்று அறிவித்தது. அதனுடள் டாஸ்மாக் நிர்வாகம் மதுபான பார் உரிமையாளர்களுக்கு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பார் உரிமையாளர்களை கிடுக்குப்படியில் சிக்க வைத்துள்ளது.

டாஸ்மாக் நிர்வகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது :-

ஒவ்வொரு நபருக்கும் இடையில் கட்டா யம் 6 அடி இடைவெளிவிட்டு அமர வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சானிடைசர் மற்றும் கைகழுவும் சோப் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

உள்ளே வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் வெப்ப அளவீடு சோதனை செய்ய வேண்டும். பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயம் அவர்களது சுயவிவரக்குறிப்பை பதிவு செய்ய வேண்டும். இதற்காக தனியாக ஒரு ஏடு பராமரிக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்கவேண் டும். பார்களில் 55 வயதுக்கு உட்பட்ட மற்றும் ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே பணிசெய்ய அனுமதிக்க வேண்டும்.

ஒரு வேளை பாரில் வேலை செய்யும் நபருக்கு தொற்று கண்ட றியப்பட்டால் அவரையும், அவருக்கு அருகில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். இது குறித்து தகவலை சம்பந்தப்பட்ட பார் ஒப்பந்ததாரர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கும், மாவட்ட கடடுப்பாட்டு மையத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுப்பிரியர்களை கட்டுப்படுத்துவது கடினம், தீபாவளி நெருங்கும் நேரத்தில் குவியும் கூட்டத்தில் பார் உரிமையாளர் என்ன செய்ய முடியும் என்று புலம்பி வருகின்றனர்.

Updated On: 31 Oct 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?