/* */

தண்டவாள பராமரிப்பு; மதுரை-செங்கோட்டை ரயில் செப்.30 வரை ரத்து

Rail Track Maintenance -தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், வரும் 30ம் தேதி வரை, மதுரை - செங்கோட்டை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தண்டவாள பராமரிப்பு; மதுரை-செங்கோட்டை ரயில் செப்.30 வரை ரத்து
X

தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக, வரும் 30ம் தேதி வரை, மதுரை - செங்கோட்டை ரயில் ரத்து.

Rail Track Maintenance -மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை, ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை (16-ம்தேதி) முதல் வரும் 30-ம்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும். அதேபோல மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக, மதியம் 1.10 மணிக்கு புறப்படும். திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில், இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே, பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (16-ம்தேதி) முதல் வருகிற 30-ம்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இதே போல சென்னை-குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரயிலாக செயல்படாது.

ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி நடக்கிறது. மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும். மதுரை பயணிகள் ரயில் ஆகியவை நாளை (16-ம்தேதி) முதல் வருகிற 30-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கோவில்பட்டியில் வருகிற 21, 22-ம் தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக, பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் சாத்தூர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. குமாரபுரம் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 28, 29-ம் தேதிகளில் பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதுவும் தவிர இந்த ரயில்கள் வருகிற 30-ம் தேதி மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் பாலக்காடு செல்லும் ரயில், மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும். தென்காசி-செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால், வருகிற 20-ம் தேதி முதல் 30-ம் தேதி தேதிகள் வரை மதுரையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இத்தகவலை மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Sep 2022 10:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்