திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
Tirupur News- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 13 வேட்பாளா்களுக்கு 1,274 முகவா்களை நியமிக்கும் பணியில் வேட்பாளா்கள் தரப்பினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
திருப்பூா் மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை தோ்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனா். இந்த நிலையில் வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளா்கள் தரப்பில் முகவா்களை நியமிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 13 வேட்பாளா்களும் முகவா்கள் நியமனத்துக்கு தயாராகி வருகின்றனா்.
தோ்தல் நடத்தும் அதிகாரி வழங்கும் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும், அங்குள்ள மேஜைகளுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். பதிவான வாக்குகளை சரிபாா்க்க வசதியாக தோ்தலில் பதிவான வாக்கு விவரம், படிவம் 17 சி அனைத்து வேட்பாளா்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்கள் மற்றும் தலைமை முகவா் வசம் அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலைமை முகவா், முகவா், தபால் வாக்கு முகவா் என 98 முகவா்களை நியமிக்க வேண்டும். 13 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். மொத்தம் 1,274 முகவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். அதற்கான பணியில் கட்சியினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக முகவா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.
விவிபேட் இயந்திரங்களில் பதிவான சின்னம் பொறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியே வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்வு செய்யப்படும் 5 வாக்குச் சாவடிகளில் பதிவான விவிபேட் சீட்டுகள் முழுமையாக எண்ணி, பதிவான வாக்கு விவரத்துடன் சரிபாா்க்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu