காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
X

புண்ணிய கோடீஸ்வரர் ஆலயத்தில் மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தும் சிவாச்சாரியார்கள்

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வரதராஜ பெருமாள் ஈசனை வழிபட்ட தலமான காஞ்சிபுரம் ஸ்ரீ புண்ணிய கோடீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி வரதராஜ பெருமாள் இத்திருத்தலத்தில் வந்து ஈசனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் பல நூறு சிவாலயங்களும் அமைந்துள்ளது. இங்குள்ள பரிகார தளத்தில் பரிகாரங்கள் மேற்கொள்ள நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகை புரிந்து பல்வேறு ஆலயங்களில் இந்த தரிசனம் கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் பழமை வாய்ந்த கோயில்களில் மீண்டும் மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்து தற்போது ஒவ்வொரு திருக்கோயில்களாக குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாநகரில் சின்னக் காஞ்சிபுரத்தில் பழமையும், வரலாற்றுச் சிறப்பும்மிக்க தர்மதவர்த்தினி சமேத புண்ணியகோடிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் தலைமை சிவாச்சாரியார் கே .ஆர். காமேஸ்வர குருக்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர்க் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிவாச்சாரியார்களால் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு ஆலயத்தில் தர்மவர்த்தினி அம்பாளுக்கும் புண்ணிய கோடீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது .

கும்பாபிஷேக ஏற்பாடுகளை புண்ணிய கோடீஸ்வரர் கோவில் செயல் அலுவலர்கள் ஆய்வர் திலகவதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story