/* */

தென்மாவட்டங்களில் 28ம் தேதி முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம்

தென்மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வருகிற 28ம் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும்

HIGHLIGHTS

தென்மாவட்டங்களில் 28ம்  தேதி முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம்
X

தட்டமை தடுப்பூசி - கோப்புப்படம் 

திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் தத்தளித்தனர். தொடர்ந்து அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் காரணமாக இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்குள்ளான தென்மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வருகிற 28ம் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 15 வயதுக்குட்பட்டோருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.

தென்மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறுவர்களும், குழந்தைகளும் உள்ளனர். இதில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும். மத்திய அரசு 10 லட்சம் தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. எனவே, போதிய எண்ணிக்கையில் அவை கையிருப்பில் உள்ளன. என்று கூறினர்

Updated On: 2 Jan 2024 6:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  6. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  7. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  8. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  9. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!