மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு

மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது:  அமித்ஷா பேச்சு
X

அமித்ஷா.

மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது என்று அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.

ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்துவிட்டது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித்ஷா கூறினார்.

பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மதம். சாதி. பிராந்தியம். மொழி உட்பட எந்த வேறுபாட்டுடனும் மக்களை பாஜக அணுகியதில்லை/ 140 கோடி மக்களையும் பாரத தாயின் குழந்தைகளாகவே பாஜக பார்க்கிறது. அதனால் ஓட்டு வங்கி கண்டு பாஜக ஒருபோதும் பயந்ததில்லை.

கொரோனா பரவல் காலத்தில் இரண்டு தடுப்பூசிகளை வழங்கி மக்களின் உயிரை பிரதமர் மோடி காப்பாற்றினார். அந்த நேரத்தில் தேஜஸ்வி யாதவ் ராகுல் ஆகியோர் இது மோடியின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என மக்களிடம் கூறினர். ஆனால் மக்கள் கேட்காமல் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சியின் போது பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நக்சலைட் தாக்குதல்கள் அதிகம் நடந்தது. பாஜக ஆட்சி அமைந்தபின் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், தெலுங்கானா ,ஒடிசா ,ஆந்திரா ,மகாராஷ்டிரா மாநிலங்களில் நக்சலைட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தது.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் ‘ஜம்மு காஷ்மீர் நிலைமையை பிரதமர் மோடி மாற்றி உள்ளார். இப்போது அங்கு லோக்சபா தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. காஷ்மீரில் பாஜக வலுவாக இல்லை கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால் தான் அங்கு பாஜக போட்டியிடவில்லை .மன்மோகன் சிங் ஆட்சியில் நாடு முழுவதும் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. அப்பாவிகள் இறந்தனர்.

ஆனால் ஒரு முறை கூட மன்மோகன்சிங் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கவில்லை ஆனால் மோடி ஆட்சியில் புல்வாமா தாக்குதல் நடந்தவுடனே பாகிஸ்தான் பகுதிக்கு நமது விமானப்படை சென்று சரியான பதிலடி கொடுத்தது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது.

இவர் அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு