/* */

ஜே.இ.இ.முதல் நிலைத்தேர்வில் கோவை மாணவி தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம்

ஜே.இ.இ.முதல் நிலைத்தேர்வில் கோவை மாணவி தீக்‌ஷா தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

HIGHLIGHTS

ஜே.இ.இ.முதல் நிலைத்தேர்வில் கோவை மாணவி   தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம்
X

ஜே.இ.இ. முதல்நிலைத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி தீக்‌ஷாவிற்கு அவர் பள்ளியில் படித்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை மற்றும் முதன்மை என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. ஐ.ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவார்கள்.

இதற்காக நடத்தப்படும் முதல்நிலை தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுதலாம். இந்த முதன்மை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.முதற்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வை 7 லட்சத்து 69 பேர் எழுதினர்.இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது..இதில் கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி 100-க்கு 99.99 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு பள்ளி சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.இதில் பள்ளியின் தாளாளர் சுகுணா லட்சுமி,மற்றும் சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சாதனை படைத்த மாணவி தீக்‌ஷா திவாகர் கூறுகையில் தேர்வு கடினமாக இருந்த போதும் முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது இப்போது கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி என்றார்.மேலும் இந்த சாதனை புரிய உதவிய தனது பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகம் என அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

Updated On: 13 July 2022 8:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்