/* */

கசப்பான பொங்கலாகி விட்டது, மண்பாண்ட தொழிலாளர்கள்

கசப்பான பொங்கலாகி விட்டது, மண்பாண்ட தொழிலாளர்கள்
X

தொடர் மழையினால் வியாபாரம் இன்றி மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இனிப்பான பொங்கல் போய் கசப்பான பொங்கலாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டு கொண்டாடுவது தமிழர்களின் மரபாகும். தற்போது அனைவரும் பாரம்பரியத்தை நாடி செல்லும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு மண்பாண்ட விற்பனை சூடு பிடிக்கவில்லை என்று மண்பாண்ட விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மண் பானைகள் வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருட காலமாக கொரோனாவால் மிகப்பெரிய வாழ்வாதாரத்தை இழந்து, வருமானத்திற்கு வரும் பொங்கல் பண்டிகையை பெரிதும் நம்பி இருந்ததாகவும், ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் விற்பனை இன்றி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதாகவும், இந்தாண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கசப்பான பொங்கல் ஆகவே அமைந்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.

Updated On: 11 Jan 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...