கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!

கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
X

கைது செய்யப்பட்ட மோகன்

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மோகன் (50) என்பவரை காவல் துறையினர் கைது செய்து செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலைய காவல் துறையினர் காபி கடை சந்திப்பு அருகே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோகன் (50) என்பவரை காவல் துறையினர் கைது செய்து செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா சாக்லேட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மோகனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி 1 ம் தேதி முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 115 நபர்கள் மீது 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 101.28 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!