அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் வசனம்...!

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் வசனம்...!
X
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பெண்ண சரியென்ன எப்போதும் விளையாது

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் வசனம்...!

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்


தப்பெண்ண சரியேன்ன எப்போதும் விளையாது

அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே


எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று;


காலங்கள் போனாலோ தின்னாதே என்பார்கள்!


மதுவுண்டு, பெண்ணுண்டு, சோறுண்டு, சுகமுண்டு,

மனமுண்டு என்றாலே சொர்கத்தில் இடம் உண்டு


நினைத்தாலே இனிக்கும்


இந்த படத்தில் இடம்பெற்ற சம்போ சிவசம்போ பாடலில் இந்த வரிகளை ரஜினிகாந்த் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ரங்கா

1982ம் ஆண்டு வெளியான ரங்கா திரைப்படத்தில் வந்த வசனம் இது. இதில் கராத்தே மணியிடம் இந்த வசனத்தை பேசியிருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

லியோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் என்னவென்று தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணையும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் மூலம், தனது முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வரும் பாடலில், D.I.S.C.O. டிஸ்கோ டிஸ்கோ என்று ஒலிக்கிறது. இதன் கதை என்னவென்று தெரியுமா?

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' 'விக்ரம்' லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். 'தலைவர் 170' படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த படத்துக்கான தலைப்பு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் திரைப்பட புகழ் த செ ஞானவேல் இயக்கிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற போலி என்கவுண்டர் ஒன்றின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி வருகின்றது.

கூலி

இதனிடையே, இன்று (ஏப்ரல் 22, 2024) 'தலைவர் 171' படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தங்கக் கடிகாரங்களால் ஆன விலங்குடன் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டைலில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கிய ரசிகர்கள் இப்போது பரபரப்புடன் போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர்.

டைட்டிலில் மர்மம் - கருத்துக்கள் பலவாறு

மிகவும் குறுகிய காலத்தில் இந்திய சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது திரைப்படங்களில் புதிர்களையும் ஆச்சரியமான திருப்பங்களையும் திணிப்பதில் வல்லவர். படத்தின் தலைப்பு சம்மந்தமான விவாதங்களும், யூகங்களும் இப்பொழுதே இணையத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த தங்க விலங்கு ரஜினிக்கு கட்டுப்பாடாக அமையுமா? கடந்த காலத்திற்கு அவரை அழைத்துச் செல்லுமா? அல்லது வேறொரு மர்மத்தை உள்ளடக்கியதா? என்றெல்லாம் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

D.I.S.C.O. இதான் கதை..!

ரஜினிகாந்தின் வின்டேஜ் கதைக்கள லுக்கை காண்பிக்க விரும்பிய லோகேஷ் கனகராஜ், அவரின் பழைய படங்களிலிருந்த வசனங்களையும் பாடல்களையும் படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதில் ஒரு பாடல்தான் D.I.S.C.O டிஸ்கோ டிஸ்கோ... இந்த பீட் வரும் இடம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது. அடுத்து திரைக்கு வரும் திரைப்படங்களின் போது இடைவேளை சமயத்தில் இதனை திரையரங்குகளில் காணும்போது நிச்சயம் ஃபயர் விடுவீர்கள்.

இந்த பாடல் ரஜினிகாந்த், பூர்ணிமா இணைந்து நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றுள்ள வா வா பக்கம் வா பாடலில் இடையில் வரும் ஒரு மெட்டுதான். டிஸ்கோ ஸ்டைலில் வரும் இந்த பாடலில்தான் D I S C O என ஒரு சூப்பர் என்ட்ரியுடன் நுழைவார் ரஜினிகாந்த். எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இருவரும் இணைந்து பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற துள்ளல் பாடலாகும்.

லோகேஷ் யுனிவர்ஸ் கனெக்சன்?

இயக்குநர் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற கருதுகோளை தனது படங்கள் மூலம் அறிமுகப்படுத்தி வருவதாக ரசிகர்களின் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். முந்தைய படமான 'விக்ரம்' படத்தில் சூர்யா 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். தங்க கடிகாரங்களால் ஆன விலங்கு அந்த பாத்திரத்தை நினைவூட்டுவதாலும், இந்தப் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் தோன்றுவார் என்ற செய்திகளாலும் 'லோகேஷ் யுனிவர்ஸ்' குறித்த விவாதம் பற்றிக்கொண்டுள்ளது.

ரிலீஸ் தேதி விரைவில்

இந்தப் படத்தில் நடிகர் - நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

படக்குழுவினருக்கு வாழ்த்துகள்

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியை தமிழ் சினிமா ஆர்வலர்கள் மாபெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்! தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக 'தலைவர் 171' அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே மேலோங்கி நிற்கிறது.

Tags

Next Story