/* */

தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டம்

தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டம்
X

டாஸ்மாக் மதுபான கடை (கோப்பு படம்)

தமிழகத்தில் விரைவில் சுமார் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு வாணிப கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளுடன் சேர்ந்து மது கூடங்களும் (பார்) நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு அதனை வாங்குபவர்களிடம் பாட்டிலில் உள்ள விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் இது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு சென்றடைவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களால் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த மாதம் கள்ள சாராயம் குடித்த 23 பேர் பலியானார்கள். அரசு மதுபான கடைகளில் அதிக விலைக்கு வாங்க முடியாதவர்கள் இப்படி கள்ளச்சாராயம் சாப்பிட்டு உயிரை இழப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் சுருண்டு விழுந்து செத்தார்கள். அவர்கள் சாப்பிட்ட மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் இதுவும் ஒரு பெரிய குற்றச்சாட்டாக பேசப்பட்டு வந்தது.

அந்த வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளால் தி.மு.க. அரசிற்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்பட்டு வருவதாக உளவுத்துறை அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுபான விற்பனை பிரச்சினையில் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும் இந்த அரசு மீது உள்ள களங்கத்தை துடைப்பதற்காகவும் மாநிலம் முழுவதும் சுமார் 500 மதுபான கடைகளை விரைவில் மூட இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான கடைகளை மூடலாம் என அதிகாரிகள் பட்டியல் தயார் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அருகில் உள்ள மதுபான கடைகள் முதற்கட்டமாக மூடப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வர இருப்பதாகவும் பரபரப்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கருத்து ஆக உள்ளது.

Updated On: 7 Jun 2023 5:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?