/* */

சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை

சென்னை திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மின்சார ரயிலுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை
X

ரயில் நிலையத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தினமும் வேலூருக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்தது . இந்த ரயில் கடந்த இரண்டாம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது. சென்னையிலிருந்து மாலை ஆறு மணிக்கு புறப்படும் இந்த ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.

12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த மின்சார ரயில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது.

நேற்று, நேற்று முன்தினம் சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் கிரிவலம் மற்றும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

அதில் சென்னை மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் பக்தர்கள் காட்பாடியிலிருந்தும் திருவண்ணாமலைக்கு வருவதற்கு இந்த மின்சார ரயில் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் இந்த ரயிலில் திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினர். பயணிகள் இடையே பெரும் வரவேற்பை இந்த ரயில் சேவை பெற்றுள்ளது.

இந்த ரயிலில் திருவண்ணாமலைக்கு கட்டணமாக ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ரூ.145 பேருந்து கட்டணமாக உள்ளது.

எனவே, பேருந்து கட்டணத்தைவிட குறைவாக உள்ளதால் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் பலா் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கழிவறை வசதி இல்லை

6 மணி நேரம் வரை ஆகும் நிலையில், ரயிலில் கழிவறை வசதி இல்லை என்ற ஆதங்கம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ரயில் திருவண்ணாமலைக்கு செல்ல சுமார் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், இவ்வளவு நீண்ட தூர பயணம் என்றாலும் பயணிகளுக்காக ரயிலில் ஒரு கழிவறை கூட இல்லை. இது பயணிகள் தரப்பில் முன்வைக்கும் பெரிய குறையாக உள்ளது. வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக பயணிகள் கூறுகிறார்கள்.

பயண நேரமும் சரியில்லை:

அதேபோல், சென்னையில் இருந்து 6 மணிக்கு கிளம்பும் ரயில் திருவண்ணாமலைக்கு செல்ல இரவு 12 மணி ஆகிறது. எனவே, இரவு நேரத்தில் பெண்கள் பயணிப்பதில் பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது. ஆகவே, ரயிலின் பயணம் நேரத்தையும் சற்று மாற்றி அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் விட்டாலும் கூட பயணிகள்

17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் விட்டாலும் கூட முழு திருப்தி அடையும் விதமாக இந்த ரயில் சேவை அமையவில்லை என்று பயணிகள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

மேலும் வார இறுதி நாள்களிலும், விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னரும் இந்த ரயிலில் மேலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக திருவண்ணாமலைக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும்.

தென்பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் விழுப்புரத்திலிருந்து இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவர் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On: 6 May 2024 1:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?