தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
Coimbatore News- கைது செய்யப்பட்ட முருகன்
Coimbatore News, Coimbatore News Today- போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சின்ன தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முருகன்(69) மற்றும் நிஷா பாத்திமா (55) ஆகிய இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்அவர்களிடமிருந்து ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல் துறைக்கு கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu