/* */

காஞ்சிபுரத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

காஞ்சிபுரத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
X

காஞ்சிபுரத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில். இத்திருக்கோயிலுக்கு சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உட்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் நகரின் மையப்பகுதியில், கீரை மண்டபம் அருகில், ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான 76 சென்ட் காலி மனை இடம் இருந்து வந்தது.

வெங்கடகிரிராஜா தோட்டம் என்ற அந்த இடத்தை அதே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கே.பி மணி மற்றும் சுரேஷ் என்ற இருவரும் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சொத்து ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் அதை உடனடியாக நீக்குமாறும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலையில் கோயில் செயல் அலுவலர்கள் குமரன் வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு இன்று அந்த இடத்தை பூட்டி சீல் வைத்து சுவாதீனம் பெறப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.இச்சொத்தின் சந்தை மதிப்பு ரூ.10 கோடி என தெரிகிறது.

Updated On: 26 Dec 2020 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?