/* */

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் பாக்யராஜ் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க புதிய நிர்வாகிகள், சங்கத்தின் தலைவர் திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ், செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் பாக்யராஜ் சந்திப்பு
X

தமிழக முதல்வர் ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ், செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் சந்தித்தனர்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பாக்யராஜ் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தினால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. நான் தனிப்பட்ட முறையில் கருணாநிதியின் எழுத்தை அதிகம் ரசிப்பவன். என்னுடைய எழுத்தை அதிகம் மதித்தவர் கருணாநிதி. அவருடனான நட்பு நீண்ட காலமாக இருந்தது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இரண்டு பேரின் நிகழ்வுகளிலும் சரிசமமாக பங்கேற்றவன் நான்.

சமீப காலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால், அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர். வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும், இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 Sep 2022 3:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?