/* */

முககவசம் அணிவதில் அலட்சியம் கொரோனாவை வரவேற்கும் மக்கள்

mask is very must. no awarness in tamilnadu people.increasing corona virus

HIGHLIGHTS

முககவசம் அணிவதில் அலட்சியம்    கொரோனாவை வரவேற்கும் மக்கள்
X

முக கவசம்.

மூன்று அலைகளை தொடர்ந்து, நான்காவது அலை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், தமிழக மக்கள் அலட்சியம் காட்டுவது, தொற்றை வரவேற்பதாக உள்ளது.

நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா தொற்று, சமீப காலமாக மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில், இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 38ஆயிரம் பேர் வரை, கொரோனா நோயால் இறந்துள்ளனர். இந்திய அளவில் 5லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர்.

பொது மக்கள் அனைவரும், வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பாதுகாப்பான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, அரசு தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், துவக்கத்தில் இருந்த கொரோனா தொற்று குறித்த அச்சம், தற்போது மக்களிடம் வெகுவாக குறைந்து போய் விட்டது.தொற்று குறித்த அச்சம் ஏதுமின்றி பலரும் உள்ளனர்.

முக கவசம் அணிய கட்டாயப்படுத்தப்படும் இடங்களில் மட்டுமே அவர்கள் முக கவசம் அணிகின்றனர். மற்றபடி பெரும்பாலான மக்கள், முக கவசமின்றி பொது இடங்களில் வலம்வருகின்றனர். பஸ் ஸ்டாண்டுகள், சினிமா தியேட்டர்கள், பூங்கா பகுதிகள், கடை வீதிகள், வணிகவளாகங்கள், கோவில்கள் என பல்வேறு இடங்களில், முக கவசம் அணியாத மக்களே அதிகமாக தென்படுகின்றனர். மக்களிடம் தொற்று குறித்த அச்சம் இல்லாத, அலட்சிய போக்கு, தொற்றை வரவேற்று, அதிகளவில் பரவ செய்யும் ஆபத்தாய் முடியும். எனவே, பொது இடங்களில் முக கவசம் அணிவதை, மக்கள் கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே, தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.

Updated On: 19 July 2022 8:02 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...