/* */

கொரோனா தடுப்பில் சிறந்து விளங்கும் சித்த மருத்துவம் : தூத்துக்குடி எஸ்பி.,

கொரோனா தடுப்பில் சிறந்து விளங்கும் சித்த மருத்துவம் : தூத்துக்குடி எஸ்பி.,
X

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கை சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் வகிப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பேசும்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருத்துவதுறையினர். அதிலும் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மிகப்பெரிய பலன் கிடைத்து வருகிறது. கபசுரக் குடிநீர் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக உள்ளது என்றார்.

மேலும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து விடக்கூடாது. தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை இருப்பதால் தொடர்ந்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.இந் நிகழ்வில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர ராமசுப்பிரமணியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Dec 2020 10:23 AM GMT

Related News