/* */

மன்னர் காலத்து இசைக்கருவியை உருவாக்கி சாதனை

மன்னர் காலத்து இசைக்கருவியை உருவாக்கி சாதனை
X

தஞ்சாவூரில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மயூரி யாழை உருவாக்கி வீணை இசைக்கலைஞர் சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூரில் வீணை தயாரிப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் வீணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த வீணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் 5 தலைமுறைகளாக வீணை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தான் செய்யும் வீணைகளில் புதுமை படைக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார். மயூரி யாழ் என்பது மன்னர்கள் காலத்தில் சுமார் 100 வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றாகும். நாளடைவில் அந்த இசைக்கருவி மறைந்து விட்ட நிலையில் தற்போது அந்த யாழ் இசைக்கருவியை மீட்டெடுக்கும் வகையில் புதியதாக மயூரி யாழ் செய்து அசத்தி உள்ளார்.

இதுகுறித்து வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன் கூறும்போது வீணை தயாரிப்பில் புதுமையாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் தஞ்சாவூரில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளை பார்த்து யாழ் என்பது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து அதன்படி அன்னபட்சி பறவை போன்று மயில் மூக்கு வைத்து சுரங்கள் அமைத்து வாசிப்பதற்கு ஏற்றவாறு இதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.அவரது இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 6 Jan 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு