/* */

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தத்திற்கு காலக்கெடு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வசதியாக ஜூலை 11-ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த்துள்ளது.

HIGHLIGHTS

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தத்திற்கு காலக்கெடு
X

(கோப்பு படம்)

நடப்பு 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியிடப் பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர். இதையடுத்து விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பத்தில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருங்காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Updated On: 4 July 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...