கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க கோரிக்கை..!

கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க கோரிக்கை..!
X

கோப்பு படம் 

குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம், விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுளளது.

குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம், விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து கோவை, திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கும், கல்வி பயிலவும், ஏராளமான பேர் கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியிலிருந்து சென்று வருகின்றனர். அதே போல் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பல அரசு அலுவலக பணிகளுக்காகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராளமான பேர் தினமும் அதே இடத்திலிருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர்.

தற்போது கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியதால், பஸ் நிறுத்தம் எங்கு என்று தெரியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க இந்த பகுதியில் இரு புறமும் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே பகுதியில், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தட்டான்குட்டை, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, வட்டமலை, எதிர்மேடு, டீச்சர்ஸ் காலனி, வளையக்காரனூர், கள்ளிபாளையம், குளத்துக்காடு, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!