/* */

16 மணி நேர போராட்டத்துக்கு பின், கம்பம் பகுதியை விட்டு ‘வெளியேறிய’ அரிக்கொம்பன்

கடந்த 16 மணி நேரமாக கம்பம் நகராட்சி மக்களை, பீதியடைய வைத்து, கலக்கிய அரிக்கொம்பன் யானை, வனத்தை நோக்கி நடந்து செல்கிறது.

HIGHLIGHTS

16 மணி நேர போராட்டத்துக்கு பின், கம்பம் பகுதியை விட்டு ‘வெளியேறிய’ அரிக்கொம்பன்
X

கம்பம் பகுதி மக்களை ‘கலவரப்படுத்திய‘ அரிக்கொம்பன் யானை. (கோப்பு படம்)

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்குள் இன்று காலை 5 மணிக்கு நுழைந்த அரிக்கொம்பன் யானை, ஒருநாள் முழுக்க கம்பத்தை கலக்கியது. கம்பம் நகராட்சி தெருக்களில் ஓடியது. பலரை விரட்டியது. வனத்துறையும், போலீசாரும், வருவாய்த்துறையினரும், கால்நடைத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து படாத பாடு பட்டு மக்களை பாதுகாத்தனர். ஒரு வழியாக மாலை 5 மணிக்கு கம்பத்தை ஒட்டி உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைந்தது. இதே சமயத்தில் இரண்டு கும்கி யானைகளும் வந்து சேர்ந்தன. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நேரு ஆகியோர் தேனிக்கு விரைந்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் சாக்குலத்து மெட்டு வனப்பகுதியை நோக்கி நடக்க தொடங்கியது.

நகராட்சியை விட்டு வெளியேறியதால் நிம்மதி அடைந்த போலீசாரும், வனத்துறையினரும் அப்படியே கும்கி யானைகள் மூலம் அரிக்கொம்பனை மெல்ல வனத்திற்குள் நகர்த்தி கேரளாவிற்குள் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர். காரணம் அரிசிக்கொம்பனை பிடிக்க வேண்டுமானால், இப்போது உள்ள கும்கி யானைகளும் போதாது. வனத்துறை பலமும் போதாது. பிடிப்பது சுலபமான காரியமும் இல்லை. ஆனால் வனத்திற்குள் நகர்த்திச் சென்று கேரளாவிற்குள் அனுப்புவது மிகவும் சுலபம். எனவே கேரளாவிற்குள் அனுப்பும் முயற்சிகளில் தமிழக வனத்துறை ஈடுபட்டுள்ளது. இதனை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், உண்மையில் தமிழக வனத்துறை அரிக்கொம்பனை அது பிறந்த மண்ணுக்கு அனுப்புவதில் தான் தீவிர கவனம் செலுத்துகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அரிக்கொம்பன் யானையிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் மிகவும் முக்கியம். யானைகளை துன்புறுத்தக்கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் தான் பிடிக்க வேண்டும் என்பது போன்ற அபந்தமான சிந்தனைகள் பற்றி தற்போது பேசிக்கொண்டிருக்க முடியாது. அரிசிக்கொம்பனை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு மக்களை பாதுகாப்பதும் முக்கியம். எனவே வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் இணைந்து மிகத்தெளிவாக திட்டங்களை வகுத்து, அரிக்கொம்பன் யானையை பாதுகாக்கவும், மக்களை பாதுகாக்கவும் போராடி வருகின்றனர். நிச்சயம் சில மணி நேரங்களில் இப்பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மக்கள் எக்காரணம் கொண்டும் அச்சப்பட வேண்டாம். தமிழக அரசு மிகவும் வல்லமை வாய்ந்த வேலைகளை தெளிவாக திட்டமிட்டு செய்வதால், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். தற்போதைய நிலவரப்படி நகராட்சி எல்லையை கடந்து பைபாஸ் ரோட்டில் அரிக்கொம்பன் உள்ளது. இவ்வாறு கூறினார்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘அரிக்கொம்பன் யானை நகராட்சி எல்லையை விட்டு, வனத்தை நோக்கி நடக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் நல்ல அறிகுறி’ என்றனர்.

Updated On: 29 May 2023 7:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!